முகம் கருத்து விட்டதா… உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்!




புலியை சிறிது எடுத்து சுடுநீரில் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு அதனை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள்தூள், அரிசி மாவு, தேன் கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனை முகத்தில் நன்றாக தடவி ஒரு சில நிமிடங்கள் கழித்து, முகத்தை தண்ணீரால் கழுவி விட்டால் கருமை நீங்கி ஒரிஜினலான நிறத்தை பெறலாம்.

வாழைப்பழத்தை, நன்கு மசித்து அதனுடன் தேன், சிறிது தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்த பின் வாழைப்பழத் தோலை, நம் முகத்தில் நன்கு படியுமாறு போட்டு, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்பினால் முகம் அழகாகும்.

உருளைக்கிழங்கை எடுத்து அதனை சீவி அதனுடன் ஆலிவ் ஆயில், சிறிது தயிர் ஓட்ஸ் இவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, சிறிது மசாஜ் செய்த பின் ஐந்து நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் முகம் அழகாகும்.

முதலில் முகத்தை நன்கு சுத்தம் செய்த பின் பன்னீர் ரோசா இதழ்களை எடுத்து நன்கு அரைத்து அதனுடன் தேன், ரோஸ் வாட்டர், வேப்பிலை, புதினா இலை, மஞ்சள் இவற்றை நன்கு அரைத்து பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து முகத்திற்கு அப்ளை செய்து ஐந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவியப்பின் முகம் அழகாகும்.

வாரம் இருமுறை முகத்தில் நாம் ஏதாவது ஒன்று வேப்ப இலையோ அல்லது கிராம்பையோ அல்லது மஞ்சள் பொடி இவற்றை போட்டு முகத்தில் ஆவி பிடிக்க வேண்டும். அப்படி ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும்.

இது போன்ற, இயற்கை சார்ந்த அழகு குறிப்புகளை பார்க்க விரும்பினால், நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

நன்றி.

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்