அழகு குறிப்புகள்

உதடு சிவப்பாக  : 

உளுத்தம் பருப்பை வறுத்து, பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து உதட்டை கழுவிவிட வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் நெல்லிச்சாறுடன் சிறிதளவு பாலாடை கலந்து உதட்டில் தடவி வந்தாலும் உதடு சிவப்பாக மாறும்.

உதடு வெடிப்பு குணமாக : 

வெள்ளரிக்காய் , எலுமிச்சை , தர்பூசணி , கேரட் , காளிப்ளவர் , பிராக்கோலி , கீரைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். மேலும் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவி வர விரைவில் உதடு வெடிப்பு நீங்கும். ஆரோக்கியமாக இருந்தாலே நமது உதடுகள் மட்டும் அல்ல சருமமும் பொலிவாகும்.

உதடு சுருக்கம் நீங்க : 

உதட்டில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து அதனை சுத்தம் செய்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைவதுடன் அவை அடிக்கடி வராமலும் தடுத்துவிடும்.

உதடு வசீகரமாக :

உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரினால் கழுவி விடவும்.

வறட்சி நீங்க : 

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து, வறண்ட உதட்டின் மீது தடவி, சில நிமிடங்களுக்குப் பின் தண்ணீர் கொண்டு கழுவவும். இவை சாதாரணமாகவே ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுவதால் பிங்க் நிறத்தில் உதடுகள் மாற உதவும். வறட்சி நீங்கி ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்க :

லிப்ஸ்டிக் போட்டதும் இரண்டு  உதடுகளுக்கும் இடையில் டிஸ்யூ பேப்பரை வைத்து அழுத்தி விட்டு அடுத்த கோட் போடலாம். டிஷ்யூ பேப்பரால் அழுத்தியதும். சிறிதளவு பவுடரைத் தடவி விட்டு இன்னொரு கோட் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும். மென்மையான பளபளப்பான உதடுகளை விரும்புவோர் லிப்ஸ்டிக் போட்டதும் அதன் மேல் லிப்கிளாஸ் தடவலாம்.


Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!