அழகு குறிப்புகள் அக்குள்
அக்குள் கருமை போக்க :
தயிர் அக்குள் கருமையை நீக்க உதவும் முதன்மையான பொருளாகும். தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
உங்கள் கைகளின் அக்குள்களில் உள்ள கருமையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவி உலர விட்டு, ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
வியர்வை நாற்றம் நீங்க :
தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும். இதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.
அக்குள் அரிப்பு நீங்க :
அக்குள் அரிப்பு கடுமையாக இருந்து, அப்பகுதி மிகவும் வறட்சியுடன் இருந்தால், வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுங்கள். இப்படி தினமும் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
அக்குள் முடிகளை அகற்ற :
ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும். இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.
Comments
Post a Comment